விபத்தை ஏற்படுத்திய சிறுவன் - பெற்றோர் மீது வழக்கு

விபத்தை ஏற்படுத்திய சிறுவன் - பெற்றோர் மீது வழக்கு

எஸ்பி அர்விந்த் 

காரைக்குடியில் விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ. 26 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்பி தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் TN 63 CW 5215 என்ற இருசக்கர வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு காரைக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நீதித்துறை நடுவர் ரூ.26,000/- அபராதம் விதித்தது மட்டுமல்லாமல் ஒரு வருட காலத்திற்கு இருசக்கர வாகனத்தின் பதிவை (Registration) நிறுத்தி வைக்க உத்தரவிட்டார். மேலும் அபாராத தொகை நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர்விந்த் தெரிவித்துள்ளார்

Tags

Next Story