பாலம் கட்டுமான தடுப்பில் கார் பாய்ந்தது.

பாலம் கட்டுமான தடுப்பில் கார் பாய்ந்தது.

குமாரபாளையத்தில் பாலம் கட்டுமான தடுப்பில் கார் பாய்ந்தது.

குமாரபாளையத்தில் பாலம் கட்டுமான தடுப்பில் கார் பாய்ந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேலம் கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவு, எஸ்.எஸ்.எம். கல்லூரி வரையிலான பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணிகள் இரண்டு மாத காலமாக நடந்து வருகிறது. இதற்காக கத்தேரி பிரிவு, எஸ்.எஸ்.எம் கல்லூரி ஆகிய இடங்களில் மாற்றுப்பாதையில் திருப்பி விட்டு, பணிகள் நடைபெறும் இடத்தில் மண் குவியல் கொட்டப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டன. நேற்றுமுன்தினம் இரவு சுமார் 02:00 மணியளவில் வேகமாக வந்த கார் ஒன்று, இந்த தடுப்பின் மீது மோதி, மண் குவியலில் பாய்ந்து நின்றது. இதன் ஓட்டுனர் மயக்க நிலையில் இருந்ததால், வாகன ஓட்டிகள் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story