பேரணாம்பட்டு அருகே மாணவியை கடத்தி சென்ற டிரைவர் போக்சோவில் கைது

பேரணாம்பட்டு அருகே மாணவியை கடத்தி சென்ற டிரைவர் போக்சோவில் கைது

கைது செய்யப்பட்டவர்

பேரணாம்பட்டு அருகே பள்ளி மாணவியை கடத்திச் சென்று ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி வந்த ஆட்டோ டிரைவர் போலீசாரான் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே பிளஸ்-1 வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி ஒருவர் கடந்த மே 2-ந் தேதியன்று காணாமல் போனதாக கூறப்படுகிறது. இது குறித்து பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் கொடுத்ததனர்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் மற்றும் போலீசார் தேடி வந்தனர். பேரணாம்பட்டு அருகே எருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் (23), ஆட்டோ டிரைவர். இவரும் காணாமல் போன மாணவியும் கடந்த 1 வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிது.

இந்த நிலையில், பேரணாம்பட்டிற்கு திரும்பிய காதல் ஜோடியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆட்டோ டிரைவர் ராஜேஷ், மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி கடத்தி சென்று, ஓசூரில் உள்ள ஓரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது.

இதனையடுத்து போலீசார் ஆட்டோ டிரைவர் ராஜேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, வேலூர் போக்சோ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாணவி அவரது பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

Tags

Next Story