இரும்பு குழாய்களை திருட முயற்றவரை கையும் களவுமாக பிடித்து ஊழியர்

X
இரும்பு குழாய்களை திருட முயற்சித்தபவரை கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஊழியர்
விருதுநகர் அருகே எம் செவல்பட்டி பகுதியைச் சார்ந்தவர் முனியாண்டி. இவர் ராமமூர்த்தி சாலையில் உள்ள நகராட்சி வாட்டர் டேங்கில் டேங்க் மஸ்தூராக வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் நேற்று பட்டேல் ரோட்டில் தண்ணீர் திறக்க சென்று விட்டதாகவும் சென்று விட்டு மீண்டும் அலுவலகத்திற்கு வந்து பார்த்த பொழுது அலுவலகத்தில் உள்ள பழைய இரும்பு குடோனில் இரும்பு குழாய்களை கள்ளிக்குடியைச் சார்ந்த முத்துப்பாண்டி என்பவர் வாகனத்தில் ஏற்றி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த முனியாண்டி அவருடன் பணிபுரியும் ராஜ்குமார் உதவியுடன் முத்துப்பாண்டியை பிடித்து மேற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார் இது குறித்து அவர் அளித்த புகார் அடிப்படையில் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story