நாமக்கல் அரசு மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்திய விவகாரம் ..சங்கீதாவுக்கு 10 குழந்தைகள்.. இப்ப 11வது கர்ப்பம்.. |கிங் நியூஸ் 24x7

சங்கீதா
நாமக்கல் அரசு மருத்துவமனையில் சங்கீதாஅனுமதிக்கப்பட்டுள்ளார்.. அங்கு அவருக்கான சிகிச்சையும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.. எனினும், மல்லசமுத்திரம் பகுதியில் இந்த சம்பவத்தின் பரபரப்பு இன்னமும் அடங்கவில்லை.. என்ன நடந்தது?
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் பேரூராட்சி தெற்கு காட்டுக்கொட்டாய் பெரிய கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி கோபி.. இவருக்கு 40 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் சங்கீதா.. 34 வயதாகிறது..
இவர்களுக்கு கல்யாணமாகி 15 வருடங்கள் ஆகின்றன.. சங்கீதாவும் வரிசையாக 10 குழந்தைகளை பெற்றெடுத்தார்.. இதில், ஒரு குழந்தை இறந்து விட்டது.. ஒரு குழந்தையை வளர்ப்பதற்கு தத்து கொடுத்துவிட்டார்.. தற்போது 2 பெண் குழந்தைகள் மற்றும் 5 ஆண் குழந்தைகளை சங்கீதா வளர்த்து வருகிறார்.. இந்நிலையில், சங்கீதா மறுபடியும் கர்ப்பமடைந்துள்ளார்.. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சொந்தக்காரர்கள், சங்கீதாவிடம் அறிவுரை சொன்னார்கள்.. இன்னொரு குழந்தை பெற்றால் உடல்நிலை மிகவும் மோசமாகி விடும், அதனால் இந்த குழந்தையை கலைத்துவிடுமாறு சொல்லியிருக்கிறார்கள். இதற்கு ஒப்புக்கொண்ட சங்கீதாவும், மல்லசமுத்திரம் அரசு ஆரம்ப சுகதார நிலையத்திற்கு கடந்த 18ம் தேதி சென்றுள்ளார்.. கருக்கலைப்பு: டாக்டரிடம் அணுகி, கருக்கலைப்புக்கான மாத்திரையை வாங்கி சாப்பிட்டுள்ளார்.. 48 மணி நேரம் கழித்து மறுபடியும் அந்த மாத்திரையை சாப்பிட வேண்டுமாம்.. ஆனால், மாத்திரையை சாப்பிட மறுத்து விட்டார் சங்கீதா.. அதுமட்டுமல்ல, வயிற்றிலுள்ள கர்ப்பத்தையும் கலைக்க மாட்டேன் என்று பிடிவாதமாக சொல்லிவிட்டார் .
இதனால் மருத்துவமனை நிர்வாகம், உறவினர்கள் எல்லாருமே குழம்பிவிட்டார்கள்.. என்ன செய்வதென்று தெரியாமல் விழித்த நிலையில், இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் உமாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது..
பிரசாந்த் புகார்: உடனடியாக மல்லசமுத்திரம் வட்டார மருத்துவ அலுவலர் பிரசாந்த் என்பவர், இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து, சங்கீதாவை மீட்டு ஆம்புலன்ஸில் அழைத்து சென்றுள்ளனர்.. இதற்கு 2 நர்ஸ்கள் பாதுகாப்பும் போடப்பட்டது. பிறகு, நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவரை அனுமதிக்க செய்திருக்கிறார்கள். இதுகுறித்து உறவினர்கள் சொல்லும்போது, "சங்கீதா ஏற்கனவே 10 குழந்தைகளை பெற்றிருக்கிறார்.. 10 குழந்தைகளையும் வீட்டிலேயே பெற்றுள்ளார். கர்ப்ப காலத்தில்கூட, மருத்துவமனை பக்கம் போனதில்லை.. கவுன்சிலிங்: இப்போது நாங்கள் அறிவுறுத்தியதால், கர்ப்பத்தை கலைக்க விருப்பம் தெரிவித்து மாத்திரை வாங்கி சாப்பிட்டுள்ளார். ஆனால், மறுபடியும் மாத்திரையை சாப்பிடாமல், டாக்டர்களிடம் தகராறு செய்திருக்கிறார்..
இதுகுறித்து போலீசில் புகார் தெரிவித்து, 2 நர்ஸ்கள் பாதுகாப்போடு சங்கீதாவை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்.. அங்கு சங்கீதாவுக்கு கவுன்சிலிங்கும் தரப்பட்டு வருகிறது" என்றனர்.