மூதாட்டி கண்களில் மிளகாய் பொடி தூவி நகை பறிப்பு

மூதாட்டி கண்களில் மிளகாய் பொடி தூவி நகை பறிப்பு

மூதாட்டி கண்களில் மிளகாய் பொடி தூவி நகை பறிப்பு

மூதாட்டி கண்களில் மிளகாய் பொடி தூவி நகை பறிப்பு
திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள கொல்லாபுரம் அண்ணா நகர் பகுதியில் சேர்ந்தவர் தன புஷ்பம் வயது 77 . இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்துள்ளார் .அப்போது திடீரென ஒரு வாலிபர் பெண் வேடமிட்டு தனபுஷ்பம் வீட்டுக்குள் புகுந்து அவரது கண்ணில் மிளகாய் பொடியை தூவி அடித்து கீழே தள்ளி புஷ்பம் அணிந்திருந்த ஒன்பது பவுன் சங்கிலி மற்றும் ஆறரைப்பவுன் வளையல் ஆகியவற்றைப் பறித்து சென்றார் . இது குறித்து பேரளம் போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை பறித்து சென்ற கீரனூர் பகுதியைச் சேர்ந்த நல்ல தம்பி என்பவரின் மகன் விஜய்யை கைது செய்தனர் . இந்த வழக்கு நன்னிலம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் கோட்டில் நடைபெற்றது .இது தொடர்பாக தீர்ப்பு கூறிய நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட விஜய்க்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறையில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து விஜய் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags

Next Story