ஒருதலை காதலால் ஆசிரியை கொலை செய்த நபர் கைது !!

ஒருதலை காதலால் ஆசிரியை கொலை செய்த நபர் கைது !!

killed

தஞ்சாவூர் மாவட்டம் சின்னமனை கிராமத்தை சேர்ந்தவர் ரமணி 26. இவர் மல்லிபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த மதன்குமார் என்பவர் ஆசிரியை ரமணியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். நேற்று ஆசிரியை ரமணியை பெண் கேட்டு அவரது வீட்டிற்கு சென்றுள்ளார் மதன் குமார்.

ரமணியை மதன் குமாருக்கு கொடுக்க அவரது குடும்பத்தினர் மறுத்த நிலையில் ஆத்திரமடைந்த மதன்குமார் இன்று காலை பள்ளிக்கு சென்றுள்ளார். ஆசிரியர் ரமணியை சந்தித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கிய நிலையில் இதனை சக ஆரியர்கள் தடுக்கும் முன்பே தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரமணியின் கழுத்தில் குத்தியுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆசிரியை ரமணியை சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சேர்ந்து மருத்துவமனை கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஆசிரியை ரமணி உயிரிழந்தார்.

இந்த கொலை தொடர்பாக மதன்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags

Next Story