சிறுமியை தாயாக்கிய அக்கா கணவர் போக்சோவில் கைது

கும்பகோணம் அருகே மச்சினிச்சியை தாயாக்கிய அக்கா கணவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

கும்பகோணம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார்(வயது 23). கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். ரஞ்சித்குமார் மனைவின் தங்கை 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.

தனது அக்காவிற்கு 2-வது குழந்தை பிறந்ததால் அந்த குழந்தையை பார்ப்பதற்காக அக்காவின் வீட்டிற்கு அந்த சிறுமி அடிக்கடி சென்று வந்துள்ளார். அந்த சமயத்தில் ரஞ்சித்குமர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும் வெளியில் தெரிவிக்க கூடாது என்றும் மிரட்டியுள்ளார். இதனால் பயந்த அந்த சிறுமி இதுகுறித்து யாரிடமும் தெரிவிக்காமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி சிறுமிக்கு வயிறு வலி ஏற்பட்டதால் கும்பகோணம் மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்

. அங்கு சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் சிறுமியின் பெயர் மற்றும் விவரங்கள் கேட்கப்பட்ட போது அவருக்கு 17 வயது தான் ஆகி இருப்பது தெரியவந்தது. உடனே ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு வந்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

அதில் சிறுமியை தனது சொந்த அக்கா கணவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு சிறுமியின் ரஞ்சித் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story