ஒற்றை நபராக 52 டூவீலர்கள் திருட்டு - பலே கொள்ளையன் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகரப் பகுதிகளில் கடந்த மாதத்தில் வாகன திருட்டு சம்பந்தமாக பல்வேறு புகார்கள் அட்கோ காவல் நிலையத்திற்கு வந்தன. இதையடுத்து அட்கோ காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி தலைமையில் போலீசார் கொள்ளையனை தேடிவந்தனர். வாகன திருட்டில் ஈடுபட்ட நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் தர்மபுரி மாவட்டம் ஜிண்டான்டா அள்ளி பகுதியைச் சேர்ந்த கண்ணன், 24. என்பதும், கடந்த ஒரு மாதத்தில் தனி நபராக 52 வாகனங்களை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து அப்பாச்சி, பல்சர், ஸ்பிளெண்டர், உள்ளிட்ட 52 வாகனங்களை பறிமுதல் செய்தனர். ஒரு மாதத்தில் தனி நபராக 52 இருசக்கர வாகனங்களை திருடிய பலே கொள்ளையனை கைது செய்த காவல் ஆய்வாளர் பத்மாவதி, உதவி ஆய்வாளர் வினோத் உள்ளிட்ட காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூர் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story