பேக்கரி கடையில் ரூ.8 ஆயிரம் திருட்டு

X
சேலம் அருகே பேக்கரி கடையில் ரூ.8 ஆயிரம் திருட்டு
சேலம் அருகே பேக்கரி கடையில் ரூ.8 ஆயிரம் திருட்டு
சேலம் சிவதாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 55). இவர் அந்த பகுதியில் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு பேக்கரியை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை கடையை திறக்க வந்தார். அப்போது கடையில் வைத்திருந்த ரூ.8 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags
Next Story
