கஞ்சா விற்ற 6 பேர் கைது, 7.5 கிலோ பறிமுதல்

கஞ்சா விற்ற 6 பேர் கைது, 7.5 கிலோ பறிமுதல்
கைது செய்யப்பட்டவர்கள் 
புளியங்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 7.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவ தாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து தென்காசி மாவட்ட. காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் புளியங்குடி காவல் ஆய்வாளர் பாலகிருஷ் ணன் தலைமையில் போலீசார் புளியங்குடி பகுதியில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த உள்ளார்

தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்த பூலித்துரை என்பவரின் மகன் காசித் துரை தலைவனார்(23), தூத்துக்குடியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மகன் முத்து கல்யாணி (22), கீழப்புதூரைச் சேர்ந்த சின்னராஜ் என்பவரின் மகன் லட்சுமணகுமார் (26), ராம்குமார்(27), சிந்தாமணிப்பேரி புதூரை சேர்ந்த வெள்ளத்துரை என்பவரின் மகன் கலை செல்வன்(19), மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் கைது செய்யப் பட்டனர்.

அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப் பட்டிருந்த ரூபாய் 75, 000 மதிப்பிலான 7. 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து காவல் ஆய்வாளர் பாலகிருஷ் ணன் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்ட 6 பேரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தார்.

Tags

Next Story