காவல் உதவி ஆய்வாளரை பணி செய்யவிடாமல் தடுத்த 3 பேர் கைது.

பாலவிடுதி காவல் உதவி ஆய்வாளரை பணி செய்யவிடாமல் தடுத்த 3 பேர் கைது.
கரூர் மாவட்டம், பாலவிடுதி காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் தர்மலிங்கம். இவர் டிசம்பர் 10ஆம் தேதி இரவு 7:30-மணி அளவில் பாலவிடுதி காவல் நிலையத்தில் பணியில் இருந்தார். அப்போது, அங்கு வந்த கரூர், பசுபதிபாளையம், ஏவிபி நகர் பகுதியைச் சேர்ந்த சிவகுமார், பசுபதிபாளையம் வடக்கு தெருவை சேர்ந்த ஆகாஷ், அதே தெருவை சேர்ந்த சந்துரு, மற்றும் அடையாளம் தெரியாத மற்றொருவர் என நான்கு பேர், தன்னிச்சையாக சத்தமிட்டு உள்ளனர். இதனை காவல் உதவி ஆய்வாளர் தட்டிக் கேட்டுள்ளார். இதனால், கோபமடைந்த 4 பேரும் காவல் உதவி ஆய்வாளரை தகாத வார்த்தை பேசி, மிரட்டல் விடுத்ததோடு, அவரை அரசு பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனர். இது தொடர்பாக, காவல் உதவி ஆய்வாளர் தர்மலிங்கம் பாலவிடுதி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், தகாத செயலில் ஈடுபட்ட சிவகுமார், ஆகாஷ், சந்துரு ஆகிய 3 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். மற்றொரு அடையாளம் தெரியாத நபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். அவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். பிடிபட்ட மூன்று பேர் மீதும் பசுபதிபாளையம், தாந்தோணி மலை, கரூர் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story