களியக்காவிளை அருகே குடும்ப தகராறில் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை

களியக்காவிளை அருகே குடும்ப தகராறில் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை

காவல் நிலையம்

களியக்காவிளை அருகே குடும்பத்த தகராறில் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை காவல் நிலையத்துக்கு உட்பட்ட கொற்றாமரம் திட்டைக்காட்டு விளை பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார்.இவர் களியக்காவிளை மார்க்கெட்டில் வாழை குலை வியாபாரியாக உள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உண்டு, கணவர் மனைவிக்கிடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது,

இதனால் கடந்த சில தினங்களாக ராஜ்குமார் மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் இரவு வீட்டுக்கு சென்றவர் தனியாக அறையில் சென்று படுத்து தூங்கியுள்ளார், காலையில் வெகு நேரம் ஆகிய பின்பும் ராஜ்குமார் படுத்து இருந்த அறை கதவு திறக்கப்படவில்லை, அவரது மனைவி அறை கதவை திறந்து பார்த்த போது அவர் மின்விசிறியில் தூக்க்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இவரது உடலைகுளியக்காவிளை போலீசார் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story