ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது:

ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது:

ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டது தொடர்பாக, அழகேசன், பெரியசாமி ஆகிய இருவரையும், நாமக்கல் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் கைது செய்தனர்.

ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது: 3 டன் ரேசன் அரிசி பறிமுதல்

ராசிபுரம் அருகே ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட, சேலத்தைச் சேர்ந்த இருவரை நாமக்கல் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3,000 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. நாமக்கல் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸ் எஸ்.ஐ சதீஷ்குமார் தலைமையிலான போலீஸார் ராசிபுரம் அருகே ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோவை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது அந்த ஆட்டோவில், ரேசன் அரிசி கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோவில் இருந்த 3,000 கிலோ ரேசன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தலில் ஈடுபட்ட சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்த அழகேசன் (55), வலசையூரைச் சேர்ந்த பெரியசாமி (38) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இருவரிடமும் அரிசி எங்கிருந்து கொள்முதல் செய்யப்பட்டது. எங்கு கடத்திச் செல்லப்படுகிறது என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story