கொலை வழக்கில் கைதானவர்கள் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்
கைது
தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு கோவங்காடு பகுதியைச் சேர்ந்த அமிர்தலிங்கம் மகன் பால்துரை (34) என்பவரை கடந்த 07.02.2024 அன்று முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில் கோவங்காடு தெற்கு தெருவைச் சேர்ந்த மாணிக்கம் மகன் மந்திரம் (எ) சின்னத்துரை (40), தெற்கு கோவங்காடு பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மகன் ராஜேஷ் (எ) ராஜேஷ்குமார் (24) ஆகியோரை சாயர்புரம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கில் கைதான மந்திரம் (எ) சின்னத்துரை மற்றும் ராஜேஷ் (எ) ராஜேஷ்குமார் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சாயர்புரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஜானகி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம்அறிக்கை தாக்கல் செய்தார். காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி உத்தரவிட்டார். ஆட்சியர் உத்தரவின் பேரில் சாயர்புரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜானகி, மந்திரம் (எ) சின்னத்துரையை பாளையங்கோட்டை மத்திய சிறையிலும், ராஜேஷ் (எ) ராஜேஷ்குமாரை பேரூரணி மாவட்ட சிறையிலும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து அடைத்தார்.