சேலத்தில் லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் உள்பட இருவர் கைது
சேலத்தில் லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் உள்பட இருவர் கைது
சேலத்தில் லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் உள்பட இருவர் கைது
சேலம் அருகே உள்ள நாழிக்கல்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் ரேஷன் அரிசி வாங்கி விற்று வந்ததாக தெரிகிறது. இதை அறிந்த உணவு கடத்தல் தடுப்பு பிரிவை சேர்ந்த பெண் தலைமை காவலர் பிரபாவதி ஒவ்வொரு மாதமும் ரூ. 10ஆயிரம் கொடுத்து விட்டு ரேஷன் அரிசி விற்பனை செய்து கொள் என தங்கராஜியிடம் கூறியதாக தெரிகிறது. இந்நிலையில் தங்கராஜ் சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். இதனை விசாரித்து வந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் ஆய்வாளர் நரேந்திரன் தலைமையிலான போலீசார் நேற்று தங்கராஜியிடம் ரசாயனம் தடவிய ரூ.10ஆயிரத்தை ஏட்டுவிடம் கொடுக்க சொல்லி அனுப்பினர். அதனை புரோக்கர் குமரேசன் என்பவரிடம் கொடுத்து அனுப்பினார். அதனை பெற்றுக் கொன்ட குமரேசன் சேலம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவுக்கு சென்று தலைமை பெண் காவலர் பிரபாவதியிடம் லஞ்ச பணம் ரூபாய் 10 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் தலைமை பெண் காவலர் பிரபாவதியையும் புரோக்கர் குமரேசனையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதன்பிறகு இன்று காலை ஏட்டு பிரபாவதி மற்றும் குமரேசன் ஆகியோரை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பிரபாவதி பெண்கள் சிறையிலும், குமரேசன் சேலம் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
Tags
Next Story