ராஜபாளையத்தில் விஷவாயு தாக்கி இஞ்சினியர் உட்பட இருவர் பலி

ராஜபாளையத்தில் விஷவாயு தாக்கி இஞ்சினியர் உட்பட இருவர் பலி
உடல்கள் மீட்பு 
ராஜபாளையத்தில் பாதாள சாக்கடையில் அடைப்புள்ளதா என சரிபார்க்கும் பணியில் ஈடுபட்ட இன்ஜினியர், உதவியாளர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் பகுதியில் 42 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவரப்பட்டு பணிகள் முடிந்த நிலையில் தற்போதும் சில இடங்களில் குழாய்கள் பணி மற்றும் அடைப்புகள் உள்ளதா என சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பெரம்பலூர் பகுதியைச் சேர்ந்த இன்ஜினியர் கோவிந்தராஜ் வயது (30) மற்றும் திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த ஜான் ஆகிய இருவரும் நேற்று ராஜபாளையம் மலையடி பட்டி இரயில் நிலையம் பின்புறம் உள்ள பகுதியில் பாதாள சக்கடை அடைப்பு உள்ளதா என இறங்கி சரி செய்து கொண்டிருந்த பொழுது விஷவாயு தாக்கி இரண்டு பேரும் உயிரிழந்தனர்.பாதாள சாக்கடை குழியில் இருந்தவர்களை தீயணைப்பு துறையினர் இரண்டு உடல்களை எடுத்து இராஜபாளையம் அரசு மருத்துவமணைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர் இச்சம்பவம் குறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story