திருவட்டார் அருகே குடிபோதையில் பைக் ஓட்டிய இரண்டு பேர் கைது

திருவட்டார் அருகே குடிபோதையில் பைக் ஓட்டிய இரண்டு பேர் கைது

காவல் நிலையம்

திருவட்டார் அருகே குடிபோதையில் பைக் ஓட்டிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவட்டார் போலீசார் நேற்று ஆற்றூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட் டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த பைக் ஒன்றை நிறுத்தி சோதனை செய்த போது, பைக்கை ஓட்டிய நபர் மது அருந்தி இருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவர் செறுகோல் பகுதியை சேர்ந்த கொத்தனார் சசிகுமார் என தெரிய வந்தது.இதே போன்று மற்றொரு பைக்கில் அதி வேகமாக வந்த நபரை சோதனை செய்த போது அவரும் மது அருந்தியிருப்பது தெரிந்தது.

அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் படந்தாலுமூடு அதங்கோடு பகுதியை சேர்ந்த மர வேலை செய்யும் தங்கம் ஆசாரி என தெரிய வந்தது. இதனையடுத்து இவர்கள் ஓட்டிய பைக்குகளை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் குலசேகரம் அரசு மருத் துவமனைக்கு கொண்டு சென்று மது அருந்தியதற்கான சான்று பெற்று கைது செய்தனர்.

Tags

Next Story