சாக்கு பையில் அடையாளம் தெரியாத பெண் சிசு

நாகை கீச்சாங்குப்பத்தில் சாக்கு பையில் அடையாளம் தெரியாத பெண் சிசு
நாகை கீச்சாங்குப்பம் தெற்கு தெரு அருகே உள்ள திடலில் சந்தேகத்துக்கு இடமாக வெள்ளை நிற சாக்கு பை ஒன்று கிடந்தது. இதனை அந்த பகுதி மக்கள் திறந்து பார்த்தபோது சுமார் 15 நாள் பெண் சிசு உயிருடன் இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப் பகுதி மக்கள் உடனே மாவட்ட குழந்தை உதவி மையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த குழந்தை உதவி மையப் பணியாளர்கள் பெண் சிசுவை மீட்டனர். தொடர்ந்து அந்த பெண் சிசுவை குழந்தை நலக்குழு முன்பு ஆஜர் படுத்தினர். இதையடுத்து குழந்தை நலக்குழு உத்தரவின்படி அந்த பெண் சிசு சிகிச்சைக்காக நாகை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள என்.ஐ.சி. பிரிவில் பெண் சிசுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அடையாளம் தெரியாத பெண் சிசுவை வீசி சென்றது யார் என்பது குறித்து குழந்தை நல குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர். இது குறித்த மேலும் விவரங்களுக்கு 1098 என்ற இலவச குழந்தைகள் உதவி மைய தொடர்பு எண்ணை தொடர்பு கொள்ளலாம். நாகை கீச்சாங்குப்பத்தில் உள்ள திடலில் கேட்பாரற்று பெண் சிசு பையில் பையில் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ...

Tags

Next Story