வாச்சாத்தி வழக்கு : முன்னாள் மாவட்ட வன அலுவலர் நீதிமன்றத்தில் சரண்

வாச்சாத்தி வழக்கு : முன்னாள் மாவட்ட வன அலுவலர் நீதிமன்றத்தில் சரண்
வாச்சாத்தி 

வாச்சாத்தி வழக்கில் மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் மாவட்ட வன அலுவலர் நாதன்(70) தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.தனக்கு விதித்த தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நாதன் மேல்முறையீடு செய்திருந்தார். மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், ஆறு வார காலத்திற்குள் தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைய வேண்டுமென உத்தரவிட்டது. இதையடுத்து நாதன் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை வேலூர் மத்திய சிறையில் அடைக்க மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி (பொறுப்பு) மோனிகா உத்தரவிட்டார்.கடந்த செப்டம்பர் 29 ம் தேதி சென்னை உயர்நீதி மன்றம், மேல் முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்ததோடு, கீழமை நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து, வாச்சாத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டிருந்தது குறி்ப்பிடதக்கது.

Tags

Read MoreRead Less
Next Story