திருமணமான 2 மாதத்தில் மனைவி கொலை - 51 வயது கணவன் சரண்
பைல் படம்
மாங்காடு அருகே கடந்த 2 மாதங்களுக்கு முன் திருமணம் செய்த மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்து போலீசில் சரணடைந்த 51 வயது கணவனை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
மாங்காடு அருகே உள்ள பரணிபுத்தூர், ஈ.வி.பிரபு அவென்யூ, ஏழாவது தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர் (51).இவர் தனது நண்பரின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தபோது அங்கு சமையல் பணி செய்து வந்த சிவப்பிரியா(35) அறிமுகமானார். கடந்த 2 மாதங்களுக்கு முன்புதிருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், நேற்று காலை மாங்காடு காவல் நிலையத்துக்கு வந்த ஸ்ரீதர் தன் மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டதாக கூறி சரணடைந்தார். இதையடுத்து, ஸ்ரீதர் வீட்டுக்கு சென்ற போலீஸார், அங்கு கழுத்தில் டவலால் இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்த சிவப்பிரியாவின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக சென்னை, கீழ்ப் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Tags
Next Story