கணவன் கண் முன்னே மனைவி பலி - போலீசார் விசாரணை

கணவன் கண் முன்னே மனைவி பலி - போலீசார் விசாரணை

கிரைன் இயந்திரத்தில் மோதி கணவன் கண் முன்னே மனைவி பலி - போலீசார் விசாரணை

கிரைன் இயந்திரத்தில் மோதி கணவன் கண் முன்னே மனைவி பலி - போலீசார் விசாரணை
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள ஆவுடைபொய்கை அருகே கேரளா வைத்தியசாலை ஒன்று உள்ளது. இங்கு முறையூரில் பெட்டிக்கடை வைத்து உள்ள நாச்சியப்பன் என்பவரின் மனைவி வளர்மதி வயது (50). இவர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அஞ்சலகத்தில் பணிபுரிந்து வருகிறார். சிகிச்சைக்காக காரைக்குடி - திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஆவிடை பொய்கை அருகே கணவன் நாச்சியப்பன் மனைவி வளர்மதி இருவரும் இருசக்கர வாகனத்தில் வரும்போது மிதமான சாரல் மழை பெய்துள்ளது. அப்போது வேகமாக வந்த க்ரைன் இயந்திரம் மீது இருசக்கர வாகனம் லேசாக உரசியதில் பின்னால் அமர்ந்திருந்த வளர்மதி கிரேன் சக்கரத்தில் விழுந்து கணவன் கண் முன்னே தலையில் பலத்த காயமடைந்து பலியானார். நாச்சியப்பன் வலது புறம் கீழே விழுந்ததால் உயிர் தப்பினார். விபத்து குறித்து குன்றக்குடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story