தடுப்புக்காவல் சட்டத்தில் பெண் சாராய வியாபாரி கைது.

தடுப்புக்காவல் சட்டத்தில் பெண் சாராய வியாபாரி கைது.

ராஜகுமாரி

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகா நொளம்பூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் பாண்டுரங்கன், இவரது மனைவி ராஜகுமாரி(48). இவர் மீது ஒலக்கூர் பகுதிகளில் தொடர்ந்து சாராயம் விற்பனை செய்ததாக பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த சில வாரத்திற்கு முன்பு சாராய வழக்கில் ராஜகுமாரியை ஒலக்கூர் போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து இவர் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்ததால் அவருடைய செயல்களை தடுக்கும் பொருட்டு தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் பரிந்துரை செய்தார். இதை ஏற்று கலெக்டர் பழனி உத்தரவின் பேரில் ராஜகுமாரியை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், வேலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story