டூவீலர்கள் மோதிய விபத்தில் பெண் படுகாயம்

டூவீலர்கள் மோதிய விபத்தில் பெண் படுகாயம்

குமாரபாளையத்தில் டூவீலர்கள் மோதிய விபத்தில் பெண் படுகாயமடைந்தார்.

குமாரபாளையத்தில் டூவீலர்கள் மோதிய விபத்தில் பெண் படுகாயமடைந்தார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் விட்டலபுரி பகுதியில் வசிப்பவர் ஹர்ஷா, 27. மகளிர் ஆடையகம் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் பகல் 12:30 மணியளவில் தன் குழந்தையை பள்ளியில் இருந்து அழைத்து வர, தனது வெஸ்பா டூவீலரில், சேலம் சாலையில் சென்று, ஸ்டேட் வங்கி அருகே வலது பக்கம் திருப்ப முயற்சிக்கும் பொது, பின்னால் வந்த கே.டி.எம். டியூக் என்ற டூவீலர் ஓட்டுனர், இவர் சென்ற வாகனம் மீது, வேகமாக மோத, ஹர்ஷா பலத்த காயமடைந்தார். இவர் பவானி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான, பவானியை சேர்ந்த, ஹரிஹரன், 27, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story