ஜெயங்கொண்டம் அருகே சாலையை கடக்க முயற்சித்த பெண் பைக் மோதி பலி

ஜெயங்கொண்டம் அருகே சாலையை கடக்க முயற்சித்த பெண் பைக் மோதி பலி

குமரி (40)

ஜெயங்கொண்டம் அருகே கட்சிப்பெருமாள் கிராமம் திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயற்சித்த பெண் மீது பைக் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சாலையை கடக்க முயற்சித்த பெண் மீது பைக் மோதிய விபத்தில் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே கட்சிப்பெருமாள் கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் மனைவி குமரி (40). இவர் சாலையின் வலது புறத்திலிருந்து இடதுபுறத்துக்கு கடக்க முயற்சித்த போது அவ்வழியே சாலையில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகன மோதி பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது போன்ற உயிரிழப்பு விபத்துக்கள் இதே ஊரில் பல முறை தொடர்ந்து நடந்தும் அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் கண்டுகொள்ளவில்லை‌ என கூறப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இதே இடத்தில் விபத்து நடப்பது வாடிக்கையாக உள்ளது. ஆகையால் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சம்பவம் அறிந்த உடையார்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து போன குமரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story