தூத்துக்குடியில் தொழிலதிபரிடம் ஐபோனை பறித்த இளஞ்சிறார் கைது

தூத்துக்குடியில் தொழிலதிபரிடம் ஐபோனை பறித்த இளஞ்சிறார் கைது

கைது செய்யப்பட்டவர்

தூத்துக்குடியில் நடைபயிற்சி சென்றபோது தொழிலதிபரிடம் ஐபோனை பறித்த இளஞ்சிறார் உட்பட 2பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி சண்முகபுரம் வண்ணார் முதல் தெருவைச் சேர்ந்தவர் ஞான செல்வராஜ் மகன் ரமேஷ் செல்வகுமார் (51). இவர் இரும்பு ஏற்றுமதி வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று காலை தூத்துக்குடி புதிய துறைமுகம் பீச் ரோட்டில் செல்போனில் பேசியபடி வாக்கிங் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பைக்கில் வந்த 2 வாலிபர்கள் அவரிடம் இருந்த ஐபோனை பறித்துசென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் ஆகும். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலையத்தில் ரமேஷ் செல்வகுமார் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில்,

தூத்துக்குடி திரேஸ்புரம் முத்தரையர் காலனியைச் சேர்ந்த சேர்ந்த முத்துவேல் மகன் இசக்கிமுத்து என்ற பொம்மை (21) மற்றும் 17 வயது இளம் சிறார் செல்போனை பறித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரை கைது செய்து, திருடப்பட்ட ஐபோனை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story