இளைஞர் சாவில் மா்மம் - காவல்துறை மெத்தனப்போக்கு

இளைஞர் சாவில் மா்மம்- நடவடிக்கை எடுப்பதில் காவல்துறை மெத்தனப்போக்கு

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள இந்திரா நகர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் ராதாமணி மகன் ராஜா (வயது 40). இவருக்கு திருமணம் ஆகி 20 வருடங்கள் ஆகிறது. ராஜா கனகா தம்பதியினருக்கு 14 வருடங்கள் கழித்து ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்த நிலையில் தனியாக குடியிருந்து வந்துள்ளார். ராஜா லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வரும் நிலையில் கடந்த 30 ஆம் தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றதாக கூறப்படுகிறது. மறுநாள் காலையில் அவ்வழியே வந்த கிராம மக்கள் வரட்டாறு கால்வாய் பகுதியில் இளைஞா் வெட்டுக் காயங்களுடன் இருந்ததை பார்த்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதில் உயிரிழந்த ராஜாவின் உடலை வீட்டிற்கு கொண்டு வந்தனர். ராஜாவின் உடலை அவரது மனைவி பார்த்தவுடன் கதறி அழுதார். ராஜாவின் உடலில் வெட்டு காயங்களுடன் இருந்ததை பார்த்து உறவினா்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து காவல் மற்றும் வருவாய் துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று கிராம மக்கள் சொல்லிய போது அவரது மனைவி கனகா மறுப்பு தெரிவித்த நிலையில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. வீட்டில் நன்றாக இருந்த தனது மகன் மர்மமான முறையில் வெட்டு காயங்களுடன் இருந்ததை பார்த்த அவரது தாயார் ராதாமணி அரூர் காவல் நிலையத்தில் மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி புகார் கொடுத்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் செய்த வந்தனா். புகாரை பெற்றுக் கொண்டு மர்மமான முறையில் உயிரிழந்த ராஜாவின் மனைவியிடம் விசாரணை நடத்தினர். ராஜாவின் தாயார் ராதாமணி மகன் ராஜாவின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அடக்கம் செய்யப்பட்ட உடலை தோண்டி பிரேத பரிசோதனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story