பைக் திருடிய வாலிபர் கைது

பைக் திருடிய வாலிபர் கைது

மல்லசமுத்திரத்தில் பைக்கை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மல்லசமுத்திரத்தில் பைக்கை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நேற்று காலை மல்லசமுத்திரம் எஸ்.ஐ.,ரஞ்சித்குமார் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக கே.டி.எம்., ஓவாக் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை விசாரித்தபோது, முன்னுக்குபின் முரணான தகவல் அளித்துள்ளார். தொடர்ந்து விசாரிக்கும்போது அவர் சேலம் ஜான்சன் பேட்டையை சேர்ந்த அண்ணாமலை45 மகன் சரவணகுமார்24 என்பதும், கடந்த பிப்.,8 ம்தேதி சூரியகவுண்டம்பாளையத்தில் ஒரு வாடகை வீட்டில் வசித்துவரும் பி.இ., முதலாமாண்டு மாணவரின் கே.டி.எம்., ஓவாக் இருசக்கர வாகனத்தை திருடி ஓட்டிவந்ததும் தெரியவந்துள்ளது. இருசக்கர வாகனத்தை கைப்பற்றிய போலீசார் சரவணகுமாரை கைதுசெய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். சரவணகுமார் மீது பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.

Tags

Next Story