திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை . பாலக்கோடு, டிச.14: தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அடுத்த கர்த்தானுர் கிராமத்தை சேர்ந்த அன்பு (வயது. 26) இவர் கட்டிடங்களுக்கு சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். தாய் தந்தை இருவரும் சிறிய வயதிலேயே இறந்து விட்டதால், அதே ஊரில் உள்ள இவரது அத்தை சுந்தரம்பாள் வீட்டில் வளர்ந்து வந்தார். இவருக்கு திருமணம் செய்ய பெண் பார்த்து வந்தனர், ஆனால் அன்பு குடிபழக்கத்திற்க்கு அடிமையாகி இருந்ததால், யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை. இதனால் விரக்தியில் இருந்தவர் வீட்டில் இருந்த மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். கூலி வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய இவரது அத்தை சுந்தராம்பாள் அன்பு தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக கிருஷ்ணாபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து கிருஷ்னாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story