ஆவடியில் நகை திருட்டில் ஈடுபட்ட வட மாநில இளைஞர்கள் கைது

ஆவடியில் நகை திருட்டில் ஈடுபட்ட வட மாநில இளைஞர்கள் கைது

கோப்பு படம் 

ஆவடியில் நகையை கொள்ளையடித்து சென்று வடமாநில இளைஞர்களை தனிப்படை அமைத்துத் தேடி அவர்களிடமிருந்து தங்கம் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர்.

சென்னை ஆவடியை அடுத்த முத்தா புதுப்பேட்டையில் கடந்த மாதம் 15 ஆம் தேதி பிரகாஷ் என்பவரை துப்பாக்கியை காட்டி மிரட்டி கை கால்களை கட்டிப்போட்டு ஒன்றரை கோடி மதிப்பிலான தங்க நகை, 5 லட்சம் ரொக்க பணத்தை 4 வடமாநில வாலிபர்கள் திருடி சென்றனர்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் 8 தனி படைகளை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் கடந்த 28 ஆம் தேதி திருடர்களுக்கு அடைக்கலம் கொடுத்த சேட்டன் ராம் , தினேஷ்குமார் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்த நிலையில், ராஜஸ்தானில் வைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அசோக் குமார், சுரேஷ் ஆகிய வட மாநில வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து 705 கிராம் தங்க நகைகளையும், 4.3 கிலோ வெள்ளி பொருட்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் 2 வடமாநில வாலிபர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்..

Tags

Next Story