விவசாய தொழிலாளர் நல வாரியத்தை செயல்படுத்திட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில்பயனற்ற உழவர் பாதுகாப்பு திட்டத்தை கைவிட வேண்டும் கலைஞர் வழங்கிய விவசாய தொழிலாளர் நல வாரியத்தை செயல்படுத்திட வேண்டும் 100 நாள் வேலையை தொடர்ந்து வழங்கிடுவதோடு, நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்கிட வேண்டும்உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கீழ்வேளூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் சிவசாமி ஒன்றிய செயலாளர் முருகன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள் ஆர்ப்பாட்டத்தை விளக்கி விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர் மாவட்ட தலைவர் நாகராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்வேளூர் ஒன்றிய செயலாளர் காசிநாதன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் மேகலா ஒன்றிய தலைவர் சிவசாமி, ஒன்றிய செயலாளர் முருகையன்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்