கீரையை ஏன் இரும்பு பாத்திரத்தில் சமைக்க கூடாது....!

கீரையை ஏன் இரும்பு பாத்திரத்தில் சமைக்க கூடாது....!

கீரை

இரும்பு பாத்திரங்கள் இயற்கையான இரும்பு சத்துகளை வெளியேற்றுவதால் கொஞ்சம் இரும்புச் சத்து உணவோடு கலந்து உடலில் சேரும் . இது நமது உடலில் உள்ள இரத்தசோகையை நீக்குகிறது. சருமத்தில் ஏற்படும் வெண் புள்ளிகளையும் சரி செய்கிறது.இரும்பு பாத்திரத்தில் சமைக்கும்போது வெப்பம் சீராகப் பரவுவதோடு மட்டுமல்லாமல் நீண்ட நேரம் வெப்பத்தைத் தக்கவைத்துக்கொள்ளும். காலம் காலமாக நாம் இரும்பு பாத்திரத்தில் சமைப்பது நன்மை என கூறி வருகிறோம். இருப்பினும் இதில் சமைக்ககூடாது உணவு பொருளும் உண்டு .கீரை போண்ற துவர்ப்புச் சுவையுடைய பொருட்களை இரும்புக் கடாயில் சமைப்பதற்கு ஏற்றது அல்ல. ஏனெனில் இரும்பு, துவர்ப்புச் சுவையுடன் வினை புரிந்து உணவுப்பொருட்களை கருப்பு நிறமாக மாற்றிவிடும். மேலும் சுவையையும் மாற்றிவிடும். சீக்கிரம் கெட்டு போகவும் வாய்ப்புகள் அதிகம். இரும்புப் பாத்திரத்தில் உணவை சமைக்கலாமே தவிர, அதில் நீண்ட நேரம் வைக்கக் கூடாது. இதனால் தான் கீரையை இரும்பு பாத்திரத்தில் சமைக்கக்கூடாது என்று பொதுவாக சொல்வார்கள்.

Tags

Next Story