டக்குன்னு ஒரு தக்காளி ஊறுகாய்!
தக்காளி ஊறுகாய்!
தேவையான பொருட்கள்
தக்காளி -1kg
புளி-100 g
மிளகாய் தூள்-200 g
வெந்தயம் -2 டேபுள் ஸ்பூன்
கடுகு - 3 டேபுள் ஸ்பூன்
பூண்டு - 10 பல்
நல்லெண்ணெய்- 200 ml
கருவேப்பிலை - 2 கொத்து
பெருங்காயம்- 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
தக்காளியை நன்கு கழுவி ஈரமில்லாமல் துடைத்து வைத்துக் கொள்ளவும். சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி தக்காளி புளி நன்கு வதக்கிக் கொள்ளவும். பின் வேறொரு கடாயில் கடுகு வெந்தயம் நன்கு வறுத்து அரைத்துஎடுத்துக் கொள்ளவும். பின் வதங்கிய தக்காளி உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து இந்த அரைத்த விழுதையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். இப்போது கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்தவுடன் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு ,கடுகு பொறிந்ததும் பூண்டு சேர்த்து நன்கு சிவக்கும்படி வதக்கவும். கருவேப்பிலை பொறிந்ததும் நான்கு வரமிளகாய் போட்டு தாளித்து சூடாக அரைத்த விழுதுடன் சேர்த்து கிளறி எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்போது தக்காளி ஊறுகாய் ரெடி.இது சப்பாத்தி இட்லி மற்றும் சாதத்திற்கும் அருமையாக இருக்கும்