முளைக்கட்டிய பச்சை பயிறு !

முளைக்கட்டிய பச்சை பயிறு !

முளைக்கட்டிய பச்சை பயிறு ! 

தேவையானவை -

பச்சைப்பயிறு 200 கிராம்


செய்முறை:

முதலில் பச்சைப் பயிரை கல், மண், தூசு நீக்கி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். சுத்தம் செய்து எடுத்துக்கொண்டு தண்ணீரில் நன்றாக கழுவ வேண்டும். தண்ணீரில் நன்றாக கழுவிய பின்னர் பத்து மணி நேரம் தண்ணீரில் நன்றாக ஊற வைக்க வேண்டும். 10 மணி நேரம் கழித்து ஊறிய பச்சை பயிரை எடுத்து தண்ணீரை வடிகட்டி ஒரு பருத்தித் துணியில் 12 மணி நேரம் கட்டி வைக்க வேண்டும். 12 மணி நேரத்துக்கு பின்னர் பயிறு முளைத்திருக்கும் இதை நாம் உணவாக உட்கொள்ளலாம்.


குறிப்பு:

முளைகட்டிய பயறுகள் உடலுக்குத் தேவையான ஆற்றலை தருகிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. பச்சை பயிறு போல் கம்பு கொள்ளு தட்டைப்பயிறு பச்சை பட்டாணி கொண்டைக்கடலை பச்சை நிலக்கடலை இவற்றிலும் முளைகட்டலாம்.

Tags

Next Story