ஹெல்தியான ஷீர் குருமா சும்மா அல்டிமேட்டா இருக்கும் !!

ஹெல்தியான ஷீர் குருமா சும்மா அல்டிமேட்டா இருக்கும் !!

நம்ம வீட்டு குழந்தைகள் நட்ஸ் சாப்பிடுவது இல்லை அப்படினா கவலை படாதிங்க !! இந்த ரெசிபி பண்ணிக் குடுங்க ....


தேவையான பொருட்கள் :

உலர்ந்த பேரிச்சை பழம் - 6

பாதம் - 25

முந்திரி பருப்பு - 20

பிஸ்தா - 15

வெள்ளரி விதை - 1 மேஜைக்கரண்டி

சாரப்பருப்பு - 3 மேஜை கரண்டி

நெய் - 2 மேஜை கரண்டி

சேமியா - 50 கிராம்

புல் கிரீம் பால் - 3 கப்

சர்க்கரை - 1/2 கப்

மில்க்மெய்ட் - 1/2 கப்

குங்குமப்பூ - ஒரு சிட்டிகை

செய்முறை :

குறிப்பிட்டுள்ள நட்ஸ் வகைகளில் பேரிச்சம் பழம் மற்றும் பாதாம் 8 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு உலர்ந்த பேரீச்சம்பழம் பாதாம் முந்திரி பிஸ்தா இவற்றை மெல்லிதாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு அடிகனமான பாத்திரத்தில் நெய் சேர்த்து உருகியதும் நறுக்கி வைத்துள்ள நட்ஸ் வகைகளை ஒவ்வொன்றாக சேர்த்து மிதமான தீயில் லேசாக மணம் வரும் வரை வறுத்து ஒரு கிண்ணத்தில் மாற்றி வைக்கவும்.

அதன் பின் மீதமுள்ள நெய்யில் சேமியாவை உடைத்து சேர்த்து சிறு தீயில் சிவக்க வறுத்து எடுக்கவும். தீயை குறைவாக வைத்து கொண்டு வறுத்த சேமியா உடன் காய்ச்சிய பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறவும்.

கொஞ்ச நேரம் சேமியா வேகும் வரை காத்திருக்கவும். அதன் பின் சர்க்கரை சேர்த்து கரைத்துக் கொள்ளவும். பின்பு மில்க்மெய்டு ஊற்றி கலக்கவும். ஒரு கொதி வந்த பின் வறுத்து வைத்துள்ள நட்ஸ்களை சேர்க்கவும்.

மேலும் ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு கடைசியாக குங்குமப்பூ சேர்த்து கலந்து அடுப்பை அணைக்கவும்.

இதனை சூடாகவோ அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து சில்லென்று பரிமாறலாம்.

Tags

Next Story