அனைத்து மருத்துவகுணம் நிறைந்த மிளகு ரைஸ் !!

அனைத்து மருத்துவகுணம் நிறைந்த மிளகு ரைஸ் !!

மிளகு ரைஸ்

மிளகில் ஆன்டிபாக்டீரியல் சக்தி அதிக அளவு இருக்கிறது. இதனால் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் சீராகும். நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு. இந்த மிளகுக்கு எண்ணற்ற மருத்துவ குணம் உள்ளது.

தேவையான பொருட்கள் :

மிளகு - 1 மேசைக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி

நெய் - 2 தேக்கரண்டி

கடலை பருப்பு - 1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

முந்திரி பருப்பு

பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி

பூண்டு நறுக்கியது

வெங்காயம் - 1 நறுக்கியது

பச்சை மிளகாய் - 4 கீறியது

கறிவேப்பிலை

உப்பு

வேகவைத்த சாதம்

பொடித்த மிளகு சீரக தூள்

செய்முறை :

ஒரு அம்மி அல்லது மிக்சர் ஜாரில், மிளகு மற்றும் சீரகத்தை எடுத்து கொரகொரப்பாக அரைத்து கொண்டு

ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் நெய் சேர்க்கவும்.

கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு மற்றும் சில முந்திரி சேர்க்கவும். அவை வறுத்தவுடன், மெல்லியதாக நறுக்கிய பூண்டு மற்றும் ஒரு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக கலக்கவும்.

கீறிய பச்சை மிளகாய் மற்றும் சில கறிவேப்பிலை சேர்க்கவும்.

இதையடுத்து, உப்பு சேர்த்து கலக்கவும். அரைத்த மிளகு, சீரகத்தூள் சேர்த்து மீண்டும் கலக்கவும்.

வேகவைத்த சாதத்தை சேர்த்து, அனைத்தையும் நன்கு கலக்கவும்.

மேலும், சிறிது மிளகு தூள், உப்பு சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலந்தால், சுவையான மிளகு சாதம் தயார்.

Tags

Next Story