ஆலு பரோட்டா ரெசிபி !!

ஆலு பரோட்டா ரெசிபி !!

ஆலு பரோட்டா

தேவையான பொருட்கள் ;

கோதுமை மாவு - 500 கிராம்

எண்ணெய் - தேவையான அளவு

உருளைக் கிழங்கு - மூன்று

மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

மிளகாய்த் தூள் - ஒரு ஸ்பூன்

கரம் மசாலா தூள் - ஒரு ஸ்பூன்

பெருங்காயம் - கால் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

ஓமம் - அரை ஸ்பூன்

சீரகம் - ஒரு ஸ்பூன்

கஸ்தூரி மேத்தி

பெரிய வெங்காயம் - 1

மல்லி இலை

கறிவேப்பிலை

செய்முறை:

3 உருளைக்கிழங்கை குக்கரில் சேர்த்து, 3 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, தேவையான உப்பு மற்றும் கொஞ்சமாக எண்ணெய் சேர்த்து, அதை மாவாக்கி பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிசைந்த மாவை குறைந்தது அரை மணி நேரமாவது மூடி வைத்துக் கொள்ளவேண்டும்.

ஒரு பாத்திரத்தில் வேகவைத்த உருளைக்கிழங்கை சேர்த்து மசித்துக் கொள்ள வேண்டும். அதில் பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயத்தைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள், அரை ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் கரம் மசாலாவை சேர்த்து கொள்ள வேண்டும்.

கால் ஸ்பூன் பெருங்காயத்தையும் சேர்த்து கொள்ள வேண்டும். அரை ஸ்பூன் ஓமத்தை நன்றாக மசித்து சேர்த்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் சீரகத்தைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு கொஞ்சமாக கஸ்தூரி மேத்தியை சேர்த்துக் கொள்ள வேண்டும். கொஞ்சமாக கறிவேப்பிலை மற்றும் மல்லி இலைகளை சேர்த்துக் கொள்ளவேண்டும். கடைசியாக அதற்கு தேவையான உப்பையும் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ள வேண்டும்.

செய்முறை வழக்கம் போல் சப்பாத்தியை தேய்த்துக் கொள்ள வேண்டும். அதன் நடுவில் மசாலா பொருட்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். மீண்டும் சப்பாத்தி மாவை மூடி தேய்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் சூடான தோசை கல்லில் புரோட்டாவை சேர்த்து வேக விட வேண்டும். இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வேக வைக்க வேண்டும். அதில் தேவையான நெய்யை இரண்டு புறமும் தடவி விட வேண்டும். இந்த பரோட்டாவை அப்படியே சுட சுட சாப்பிட்டால் ருசி அருமையாக இருக்கும். இதற்கு தயிர் பச்சடி சேர்த்து பரிமாறவும்.

Tags

Next Story