அசத்தலான கிச்சன் டிப்ஸ் !!
கிச்சன் டிப்ஸ்
சப்பாத்தி, பூரி செய்வதற்காக மாவை உருட்டித் தேய்க்கும்போது மைதா மாவுக்குப் பதிலாக சோள மாவைப் கார்ன் ப்ளோர் பயன்படுத்தினால், தேய்ப்பதற்குச் சுலபமாக இருக்கும்.
சோளத்தை வேக வைக்கும்போது ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்க்க, அதில் இயற்கையாக உள்ள இனிப்புச்சுவை தூக்கலாக தெரியும். ருசியும் கூடும்.
வெந்தயக்குழம்பு தயார்செய்து இறக்கும் போது ஒரு டீஸ்பூன் எள்ளுப்பொடியைப் போட்டால் வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும்.
மீந்துபோன வாழை, உருளை சிப்ஸை வீணாக்காமல் மிக்ஸியில் கரகரப்பாகப் பொடித்து, பொரியலுக்குத் தூவலாம். மாறுபட்ட சுவையும் மணமும் கிடைக்கும்.
கொத்தமல்லி மலிவாக கிடைக்கும்போது அதை வாங்கி நறுக்கி, அத்துடன் உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துவடையாகத் தட்டி வெயிலில் காய வைத்து வடகமாகச் செய்து ரசத்தில் பொரித்துப் போடலாம்.
கோதுமை மாவைச் சலித்தால் வரும் தவிட்டில் தயிரைக் கலந்து உடலில் தேய்த்துக் குளித்தால் வெயிலினால் வரும் எரிச்சல், அரிப்பு ஓடிவிடும்.
பாயசம் நீர்க்க இருந்தால், அதில் வாழைப்பழத்தைப் பிசைந்து போட்டு, கொஞ்சம் தேனும் கலந்தால் சுவையான கெட்டிப் பாயசம் ரெடி.
மோர்க்குழம்புக்குப் புளித்த மோர் இல்லையென்றால், மூன்று புளிப்பான தக்காளியை மோர்க் குழம்புக்குத் தேவையான பொருட்களுடன் சேர்த்து அரைத்தால் புளிப்புச் சுவை வந்துவிடும்.
உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்யும்போது மேலாக சிறிது காய்ந்த ரொட்டித் தூவினால் கரகரப்பாகவும் ருசியாகவும் இருக்கும்.
சாதம் குழைந்துவிட்டால், பாதி எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து, பிறகு வடித்தால் சாதம் பூப்போல் "பொல பொல" வென இருக்கும்.