ஆந்திரா ஸ்டைல் நெத்திலி முட்டை கறி ரெசிபி !!

Egg Curry
நெத்திலி கருவாட்டுடன் அவித்த முட்டை மற்றும் சில மசாலா பொருட்கள் சேர்த்து தாயார் செய்யப்படும் முட்டை கிரேவியை நம் வீட்டிலேயே செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
முட்டை - 6
கருவாடு - 100கி
மஞ்சள் - 1 சிட்டிகை
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன்
தக்காளி - 2
உப்பு - 1 ஸ்பூன்
மிளகாய் பொடி - 1 ஸ்பூன்
கொத்தமல்லி - 1 கொத்து
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
முதலில் முட்டையை பாத்திரத்தில் தண்ணீருடன் சேர்த்து அவித்து கொள்ளவும்.
இதனிடையே எடுத்துக்கொண்ட சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றை நன்கு பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
பின் கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெயுடன் முட்டை, மஞ்சள் சேர்த்து வறுத்து தனி ஒரு தட்டில் மாற்றிக்கொள்ளவும்.
பின் இதே எண்ணெயில் கருவாடு சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும். பின் எண்ணெயில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் நீங்க வதக்கவும்.
பின் இதனுடன் தக்காளி, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, உப்பு ஆகியவற்றையும் சேர்த்து நன்கு விழுதாக வதக்க்கொள்ளவும். பின் இதனுடன் முட்டை, கருவாடு சேர்த்து 2- 3 நிமிடங்களுக்கு வதக்கவும்.
பின் இறுதியாக இதனுடன் கொத்தமல்லி தழைகளை (பொடியாக நறுக்கி) சேர்த்து கிளறி அடுப்பில் இருந்து இறக்கிவிட ‘நெத்திலி முட்டை கறி தயார்.