பூசணிக்காய் சட்னி சாப்பிட்டு இருக்கிங்களா !! ஒரே மாறி செஞ்சி போர் அடிக்குதா - அப்போ உங்களுக்கான சட்னி ரெசிபி !!

பூசணிக்காய் சட்னி சாப்பிட்டு இருக்கிங்களா !! ஒரே மாறி செஞ்சி போர் அடிக்குதா - அப்போ உங்களுக்கான சட்னி ரெசிபி !!

பூசணிக்காய் சட்னி

பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும். புண்களை ஆற்ற, தழும்புகளை காணாமல் போகச் செய்யவும் பூசணிக்காய் பயன்படும். பூசணி அடிக்கடி உணவில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை தக்கவைக்கும். பூசணிக்காய் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு கண் பார்வை சிறப்பாக இருக்கும்.

தேவையான பொருட்கள் :

நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - 1 கொத்து

பூண்டு - 4 பல் * புளி - சிறிய துண்டு

சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி

மஞ்சள் பூசணி - 2 கீற்று (பொடியாக நறுக்கியது)

பெருங்காயம் - 2 சிட்டிகை * உப்பு - சுவைக்கேற்ப

தக்காளி - 2 (நறுக்கியது) * காஷ்மீரி வரமிளகாய் - 2

வரமிளகாய் - 2

கொத்தமல்லி - சிறிது

தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்

வறுத்த வேர்க்கடலை - 2 டீஸ்பூன்

நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

செய்முறை :

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். பின் அதில் கறிவேப்பிலை, பூண்டு, புளி, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அடுத்து அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள மஞ்சள் பூசணியை சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்பு அதில் பெருங்காயத் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நறுக்கி வைத்துள்ள தக்காளியையும் சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும். * பிறகு காஷ்மீரி வரமிளகாய் மற்றும் வரமிளகாயை சேர்த்து, கொத்தமல்லியைத் தூவி 2 நிமிடம் வதக்க வேண்டும்.

பின் துருவி வைத்துள்ள தேங்காயை சேர்த்து 1 முறை கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும். அடுத்து மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன் வேர்க்கடலையையும் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான பூசணிக்காய் தக்காளி சட்னி ரெடி.

Tags

Next Story