வரகரிசி தம் பிரியாணி ரெசிபி !!
வரகரிசி பிரியாணி
தேவையான பொருட்கள்:
வரகரிசி - 2 கப்
கேரட், பட்டாணி, காலிஃபிளவர், பீன்ஸ், உருளைக்கிழங்கு (பொடியாக நறுக்கியது) - 11/2 கப்
நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1/2 கப்
பொடியாக நறுக்கிய தக்காளி - 1/4 கப்
எலுமிச்சம்பழ ஜூஸ் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெயும் நெய்யுமாகச் சேர்த்து - 1/4 கப்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - - 31/2 கப்
தயிர் - 1 டேபிள்ஸ்பூன்
அரைக்க :
பட்டை - 1பெரிய துண்டு
கிராம்பு - 3
புதினா, கொத்துமல்லித் தழை -சிறிது
இஞ்சி - பெரிய துண்டு
பூண்டு - 7 பல் (தோலுடன்
தாளிக்க:
பிரியாணி இலை - 1
பட்டை - 1 சிறிய துண்டு
கிராம்பு - 2
செய்முறை :
வரகரிசியை கழுவி அரைமணி நேரம் ஊற வைக்கவும். அடிகனமான ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய்யும் நெய்யுமாக உள்ளதில் பாதி ஊற்றி தாளிப்புப் பொருட்களை போடவும். வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் அரைத்த விழுதைச் சேர்த்துக் கிளறி, காய்கறிகளைச் சேர்க்கவும். இரண்டு நிமிடம் வதக்கிய பின் தக்காளி சேர்க்கவும். தக்காளி உடையாமல் கிளறி தயிர், மஞ்சள்தூள், மிளகாய்த் தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். நன்கு வதங்கிய காய்களில் தண்ணீர் சேர்த்து, கொதி வந்ததும் உப்பும் எலுமிச்சம்பழச் ஜூஸ்ஸும் சேர்த்து பிறகு அரிசியைப் போடவும். பெரிய தீயில் 5 நிமிடம் கொதிக்க விட்டு, அடுப்பை குறைத்து சிம்மில் 15 நிமிடங்கள் வைக்கவும். இடையில் இருமுறை மீதமிருக்கும் நெய்யையும் எண்ணெய்யையும் சேர்த்து அரிசி உடையாமல் கலந்துவிட வேண்டும். இப்போது முக்கால் பதம் வெந்திருக்கும். இனி தம் போடும் முறை. பாத்திரத்தின் வாயை ஒரு துணியில் கட்டி அதன் மேல் ஒரு தட்டு வைத்து எரிதணல் போடலாம். எரிதணல் கிடைக்காதவர்கள் நன்றாகக் கொதிக்கும் தண்ணீரை பாத்திரத்துடன் அந்தத் தட்டின் மேல் வைக்கலாம். அல்லது சூடான குக்கரை கூட வைக்கலாம். அதிகபட்சம் 10 நிமிடங்கள் போதும். இறுதியாக பிரியாணியை சிறிது நெய்விட்டு ஒரு முறை கிளறி தயிர் பச்சடி சேர்த்து பரிமாறலாம்.