நோயெதிர்ப்பு பண்புகளை தரும் பிரண்டைப் பொடி !!
பிரண்டைப் பொடி
பிரண்டைப் பொடி என்பது கூட்டு ஆரோக்கியம் மற்றும் செரிமான ஆதரவு முதல் அழற்சி எதிர்ப்பு மற்றும் நோயெதிர்ப்பு-அதிகரிக்கும் பண்புகள் வரை பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட பல்துறை மூலிகை நிரப்பியாகும். எங்கள் பிரண்டைப் பொடியை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் பங்களிக்கும்.
தேவையான பொருட்கள் :
பிரண்டை - 2கைப்பிடி
மிளகாய் - 5வற்றல்
கடலை பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
உளுந்து பருப்பு - 2டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு - 2டேபிள் ஸ்பூன்
எள்ளு - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1டீஸ்பூன்
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
புளி - சிறிய எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணை - 2டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - தேவையான அளவு
செய்முறை :
பிரண்டையை நார் உரித்து சுத்தம் செய்து தயாராக வைக்கவும். பின்னர் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பிரண்டையை சுத்தம் செய்து, நறுக்கும் போது கையில் எண்ணெய் தேய்துக் கொள்ளவும். பிரண்டை அரிப்புத் தன்மை கொண்டது.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள பிரண்டையை சேர்த்து நன்கு வதக்கி வைத்துக்கொள்ளவும். அதே வாணலியை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகு, சீரகம்,வற்றல்,கறிவேப்பிலை, கல் உப்பு எல்லாவற்றையும் தனித்தனியாக வறுக்கவும்.
பின்னர் எள்ளு,பருப்புகளை சேர்த்து வறுத்து எடுத்து தயாராக வைக்கவும். பெருங்காயம் சேர்த்து கலந்து விடவும். கடைசியாக வறுத்து வைத்துள்ள எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி இறக்கவும்.
வறுத்த பொருட்கள் எல்லாம் ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடிக்கவும். கடைசியாக வறுத்து வைத்துள்ள பிரண்டையை சேர்த்து பொடிக்கவும். இப்போது மிகவும் சுவையான,சத்தான பிரண்டைப் பொடி சுவைக்கத்தயார். சாதத்துடன் நல்லெண்ணெய் சேர்த்து பொடியுடன் சாப்பிடலாம்.