ஹெல்தியான கறிவேப்பிலைப் பொடி செய்யலாமா..
கறிவேப்பிலைப் பொடி
நம் அன்றாட வாழ்கையில் கறிவேப்பிலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நம் சமைக்கும் அணைத்து உணவுகளிலும் கறிவேப்பிலை ஒன்று மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. நம் சாப்பிடும்போது அதனை ஒதுக்கி வைக்கின்றோம். அப்போ இந்த மாறி சாப்பிடும்போது எல்லாருக்கும் பிடிக்கும். இதில் உள்ள ஆரோக்கியம் நமக்கு கிடைக்கும். இந்த ரெசிபி குழந்தைகளுக்கும் புடிக்கும். நெய் சேர்த்து சாதத்துடன் பரிமாறலாம் அல்லது இட்லி அல்லது தோசையுடன் சாப்பிடலாம் டெஸ்ட் நல்ல இருக்கும்.
தேவையான பொருட்கள் :
கறிவேப்பிலை - 1 கப்
துவரம் பருப்பு - 2 டீஸ்பூன்
கடலை பருப்பு - 2 டீஸ்பூன்
உளுந்து பருப்பு - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கருப்பு மிளகு - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2 முதல் 3
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
ஒரு காய்ந்த கடாயில் கறிவேப்பிலையை எடுத்து, அது காய்ந்து போகும் வரை குறைந்த தீயில் வறுக்கவும். அதனை ஓரமாக ஒதுக்கி வைக்கவும்.
அதே கடாயில் மீதமுள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஒரு தட்டில் எடுத்து ஆறவிடவும். கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைக்கவும். காற்று புகாத பாத்திரங்களில் பல மாதங்கள் சேமிக்கலாம். சிறிது நெய்யுடன் சாதத்துடன் பரிமாறலாம் அல்லது இட்லி அல்லது தோசையுடன் சாப்பிடலாம். நம்ம ஹெல்தியான கறிவேப்பிலைப் பொடி தயார்.