குடைமிளகாய் பேபிகார்ன் கறி !

குடைமிளகாய் பேபிகார்ன் கறி !

குடைமிளகாய் பேபிகார்ன்

குடைமிளகாய் பேபிகார்ன் கறி

தேவையான பொருட்கள்:

நீளமாக நறுக்கிய குடைமிளகாய் - 1 கப்

நீளமாக நறுக்கிய பேபிகார்ன் - சிறிதளவு

சீரகம் மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய கொத்துமல்லி - 1/4 கப்

பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - சிறிதளவு

எண்ணெய் - 4 டீஸ்பூன்

அஜினோமோட்டோ சிறிதளவு

உப்பு தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சிறிது சீரகம் போட்டு பொரிந்ததும் பேபிகார்னை போட்டு சிறிது வதக்கவும். பேபிகார்ன் பாதி வதங்கியதும் குடைமிளகாய், மஞ்சள்தூள் போட்டு வதக்கவும்.

குடைமிளகாய் லேசாக நிறம் மாறியதும் மிளகாய் தூள், உப்பு, அஜினோமோட்டோ போட்டு ஒரு முறை நன்றாக கிளறி கொத்துமல்லி இலை, வெங்காயத்தாள் தூவி இறக்கவும்.

Tags

Next Story