கேரமல் பிரட் புட்டிங் ரெசிபி !!

கேரமல் பிரட் புட்டிங் ரெசிபி !!

கேரமல் பிரட் புட்டிங் 

கேரமல் பிரட் புட்டிங் ரெசிபி

தேவையான பொருட்கள் :

பால் - 2 கப்

பிரட் துண்டுகள் - 6

சக்கரை - 1/2 கப்

கஸ்டர்ட் பவுடர் - 1/4 கப்

செய்முறை :

வாணலியில் 1/4 கப் சக்கரை சேர்த்து கேரமலைஸ் செய்து புட்டிங் செய்ய போகும் பாத்திரத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும்.

பிரெட் துண்டுகளில் ஓரங்களை நீக்கி மிக்ஸியில் போட்டு கோரகோரப்பாக அரைத்து கொள்ளவும்.

பால், சக்கரை 1/4 கப்‌, கஸ்டர்ட் பவுடர் சேர்த்து கரைத்து கொள்ளவும். அதை வாணலியில் சேர்த்து மிதமான சூட்டில் கலரவும்.

பால் சிறிது திக்கானதும் அதில் பொடித்த பிரேட் சேர்த்து கலக்கவும். கிரிம் போல ஆனதும்‌ அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.

அதை கேரமல் இருக்கும் பாத்திரத்தில் ஊற்றி சமம்மாக தட்டவும். பிறகு மூடிப் போட்டு 40 நிமிடங்கள் ஆவியில் மிதமான சூட்டில் வேகவைக்கவும். வெந்ததும் ஆறவிடவும்.

வேண்டும் என்றால் பிரிட்ஜில் 1 மணிநேரம் செட் செய்யலாம். பிறகு தட்டில் தலைகீழாக திரும்பினால் புட்டிங் தயார். துண்டுகள் செய்து பரிமாறலாம்.

Tags

Next Story