கலக்கலான புரோட்டா சால்னா! நம்ம ஊர் ஸ்டைலில்...

கலக்கலான புரோட்டா சால்னா! நம்ம ஊர் ஸ்டைலில்...

பாராட்டா சால்னா

இருப்பதை வைத்து ஈஸியா செய்யனுமா?பரோட்டா, சப்பாத்தி, தோசைக்கு ஒரு கலக்கலான டிஷ் என்றால் இந்த கெட்டி சால்னாதான்.எப்படி செய்வதென்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம் .

தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம்-3

தக்காளி-4

எண்ணெய்- 100 ml

பட்டை-2

பிரியாணி இலை-1

கிராம்பு-2

ஏலக்காய்-2

லவங்கம் -2

புதினா கொத்தமல்லி-ஒரு கைப்பிடி அளவு

இஞ்சி பூண்டு பேஸ்ட்-1டேபிள் ஸ்பூன்

மிளகாய்த்தூள்- 1டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லித்தூள் -1/2டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா-1டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள்-1/4 டீஸ்பூன்

உப்பு-தேவையான அளவு

சர்க்கரை-1/4 டீஸ்பூன்

தோல்நீக்கிய தேங்காய் துண்டுகள் -7 பல்

தோல்நீக்கிய சின்ன வெங்காயம் -10

முந்திரி-10

கசகசா-1/4 டீஸ்பூன்

சோம்பு -1/4 டீஸ்பூன்

பூண்டு-5பல்

குறிப்பு : கசகசா, முந்திரியை சேர்த்து 5 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.

செய்முறை :

முதலில் சால்னா செய்வதற்கு மேலே குறிப்பிட்ட அளவில் விழுதை அரைத்து வைத்துக் கொள்ளவும்.பின் அடுப்பை பற்ற வைத்து அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, லவங்கம்,பிரியாணி இலை,ஏலக்காய் சேர்த்து பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும் .பின் சிறு துண்டுகளாக நறுக்கிய தக்காளியும் சேர்த்து நன்கு வதக்கவும் .வதங்கியப்பின் இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் . மிளகாய்த்தூள்,கொத்தமல்லித்தூள் ,கரம் மசாலா,

மஞ்சள் தூள்,உப்பு மற்றும் புதினா சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறி விடவும்.

இப்போது அரைத்து வைத்துள்ள விழுதை இதனுடன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இரண்டு மூன்று நிமிடம் கொதிய விடவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் சிறு துண்டுகளாக நறுக்கிய கொத்தமல்லி தலையை தூவி விட்டு ,இறக்குவதற்கு முன் மேலும் சுவைக்காக 1/4 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கினால் கெட்டி சால்னா ரெடி. பரோட்டா, சப்பாத்தி, தோசை க்கு அருமையான கலக்கலாக இருக்கும்.

Tags

Next Story