கிறிஸ்துமஸ் வந்தாச்சு கேக் செய்ய போறிங்களா ! அப்போ உங்களுக்கான டிப்ஸ் !!

கிறிஸ்துமஸ் வந்தாச்சு கேக் செய்ய போறிங்களா ! அப்போ உங்களுக்கான டிப்ஸ் !!

  கேக்

கிறிஸ்துமஸ் என்றாலே கேக் தான் ஸ்பெஷல். சிறந்த பொருட்களை பயன்படுத்தினால் மட்டுமே சரியான கேக்கை பெற முடியும்.

பிரஷ்ஷான உலர் பழங்கள், நட்ஸ், மசாலா பொருட்கள் மற்றும் நல்ல தரமான மாவை பயன்படுத்த செய்யுங்கள்.

சுவையான கிறிஸ்துமஸ் கேக்கிற்கு முக்கியமான பொருளாக ஊறவைத்த உலர் பழங்கள் திகழ்கிறது. அதனை ரம், பிராந்தி போன்ற ஆல்கஹாலில் ஒரு வாரம் முன்பே ஊறவைக்க வேண்டும்.

ஆல்கஹால் விரும்பாதோர் ப்ரூட் ஜூஸை உபயோகிக்கலாம். இது கேக்கின் சுவையை அதிகரிக்க உதவும்அனைத்து பொருட்களையும் சரியான அளவில் பயன்படுத்தினால் மட்டுமே ருசியான கேக்கை பெற முடியும்.

பொருட்களின் அளவு சரியாக இல்லையென்றால் அது கேக்கின் அமைப்பு மற்றும் சுவையை பாதிக்கக்கூடும் இலவங்கப்பட்டை, ஜாதிக்காய், கிராம்பு போன்றவை கேக்கிற்கு சுவையும், நறுமணத்தையும் அளிக்கின்றன.

அவற்றை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்கேக் கலவையை சரியான முறையில் மிக்ஸ் செய்ய வேண்டும். அதிகமாக மிக்ஸ் செய்வது கேக்கை கெட்டியாக்க வாய்ப்புள்ளது. அதேநேரம், குறைவாக மிக்ஸ் செய்வது மூலப்பொருட்களின் சீரற்ற விநியோகத்திற்கு வழிவகுக்கும்.

பானில் கேக் ஓட்டாமல் இருக்க பட்டர் பேப்பரை வைக்க வேண்டும். அதேபோல், நீண்ட நேரம் பேக்கிங் செய்யும் போது கேக் கருகிவிடாமல் இருக்க, பிரவுன் பேப்பரை கொண்டு கடாயின் வெளிப்புற பகுதியை கவர் செய்ய வேண்டும்கேக்கை பேக் செய்திட வைக்கும் முன்பு, மைக்ரோவேவ் ஓவனை ஃப்ரீ ஹீட் செய்வது அவசியமாகும்.

அதேபோல், குறைவான வெப்பத்தில் நீண்ட நேரம் பேக் செய்வது சிறந்த முறையாகும். இது உட்புற பகுதி பேக் ஆகும் போது, வெளிப்புறம் கருகாமல் இருக்க உதவக்கூடும்கேக்கின் சுவை மற்றும் ஈரப்பதத்தை தக்கவைத்திட, ஆல்கஹால் சேர்க்க செய்வார்கள்.

ஆல்கஹால் விரும்பாதோர் ஆரஞ்சு ஜூஸ் அல்லது சிரப்பை பயன்படுத்த செய்யலாம். பல நாட்கள் வைத்திருக்கும் போது இம்முறையை பின்பற்றுவார்கள்

Tags

Next Story