கார்ன் ப்ரெட் குருமா !
கார்ன் ப்ரெட் குருமா
கார்ன் ப்ரெட் குருமா
தேவையான பொருட்கள்:
சோளம் - 1 கப்
ப்ரெட் துண்டங்கள் 4
தயிர் 1/2 கப்
வெங்காயம் - 1
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் + ப்ரெட் பொரிப்பதற்கு
அரைப்பதற்கு: தேங்காய் 1/2 கப்
வெங்காயம் 1
பச்சை மிளகாய் - 5 அல்லது 6
சோம்பு - ½ டீஸ்பூன்
கிராம்பு - 2
பட்டை - 1/2 அங்குலத்துண்டு
கொத்துமல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
கசகசா - 2 டீஸ்பூன்
செய்முறை:
மேலே அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றாய் சேர்த்து அரைத்து எடுத்து தனியே வைக்கவும்.
ப்ரெட் துண்டங்களை சதுரத் துண்டங்களாக நறுக்கி, எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கின வெங்காயத்தைப் போட்டு நிறம் மாறும் வரை வதக்கவும்.
அத்துடன் அரைத்த மசாலாவைச் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.
பின்னர் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீரும் சேர்த்து கொதிக்கவிடவும்.
சோளத்தை தனியே வேக வைத்து எடுத்து இதில் சேர்க்கவும். கடைந்த தயிரையும் அத்துடன் சேர்க்கவும்.
குறைந்த தீயில் சிறிது நேரம் வேகவைத்து இறக்கி சூடாக பரிமாறவும்.
பரிமாறுவதற்கு முன்பு பொரித்து வைத்துள்ள ப்ரெட் துண்டங்களை அதில் சேர்க்கவும்.