ஹெல்தியான வெள்ளரிப் பச்சடி !
வெள்ளரிப் பச்சடி !
வெள்ளரிப் பச்சடி
"அதிக அமிலங்களால் அவதிப்படும் உடலுக்கு வெள்ளரியே மாமருந்து''
ஐந்து நபர்களுக்கு தேவையான பொருட்கள்:
இயற்கைத் தயிர் - 100 கிராம்
(தேங்காய் தயிர், சோயாபீன்ஸ் தயிர் ஏதேனும் ஒன்று)
வெள்ளரி 200 கிராம்
காரட் - ஒன்று
மிளகுத்தூள் - சிறிது
இந்துப்பு - சிறிது
கருவேப்பிலை, மல்லித்தழை- சிறிது
தயாரிப்பு முறை:
வெள்ளரி, காரட்டை நன்றாகக் கழுவி சிறிய சதுரம் அல்லது தீக்குச்சி வடிவில் வெட்டவும். கருவேப்பிலை, மல்லித்தழைகளையும் கழுவி, சிறிதாக நறுக்கவும் . நறுக்கிய காய்கறி, தழைகளுடன் உப்பு மிளகுத்தூள், இயற்கைத் தயிர் சேர்த்துக் கிளறினால் நல்ல அருமையானப் பச்சடி சாப்பிடத் தயார். இதேபோல வெங்காயம் பச்சடி, வெண்பூசணி பச்சடி, சவ்சவ் பச்சடி, சுரைக்காய் பச்சிடி என பலவகைகளைத் தினம் ஒன்றாகச் செய்து சாப்பிடலாம். பிற உணவுகளுடன் இணைத்தும், தனியாகவும் சாப்பிடலாம்.
பயன்கள்:
எல்லா அன்பர்களும் பயன் பெறுவர். நீரழிவு அன்பர்கள் தினம் அவசியம் சாப்பிட வேண்டும். குடல்புண் ஒரு அன்பர்த்தில் நிவர்த்தியாகும். உடல் குளிர்ச்சி பெறும். வெயில் யில் காலங்களில் சாப்பிட ஆரம்பிக்கலாம். மூல வியாதி குணம் ஆகும். அதிக உயர் இரத்த அழுத்தம், சிறுநீரகப் பிணிகள், ஒபேசிட்டி அன்பர்கள் தினம். சாப்பிட்டுவர நல்ல பலன்களைப் பெறுவர். மலக்கட்டு விலகும்.
வெயில் காலங்களில் தினமும் வெள்ளரியை அவசியம் பயன் படுத்த வேண்டும். சோடியம் குளேரைடு கடல் உப்புக்கு மாற்றாக பொட்டாசியம் நிறைந்த உணவு, வெள்ளரி அதையும் சமைக்காமல் சாறு, பச்சடி, கூட்டு, பசுங்கலவை மூலம் சாப்பிட்டு பயன்பெற வேண்டும். சிறுநீரகக் கல்அடைப்பு அன்பர்கள் தொடர்ந்து சாப்பிட நல்லபலன் கிட்டும்.
கண்ணாடி அணிந்த அன்பர்கள், முகஅழகுக் குறைவு முகப் பருவால் அவதிப்படும் அன்பர்கள், தோல்பிணியாளர்கள் அடிக்கடி சாப்பிட்டு நலம் பெறலாம். நமது அன்றாட உணவுகளின் ஓர் அங்கமாக இனி சேர்க்க வேண்டும். இதய இரத்த அடைப்புக்கு காரணமான அதிக கொலஸ்ட்ராலை கரைக்கும் முதல் தர போர் வீரனாய் வெள்ளரி விளங்குகிறது.