ருசியான ப்ரக்கோலி 65 செய்யலாமா !!
ப்ரக்கோலி 65
ப்ரக்கோலி ப்ராக்கோலி கால்சியம் சத்தினை அதிகம் கொண்டதாக உள்ளதால், பல் மற்றும் எலும்பினை வலுவாக்குவதாகவும், பல் மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வாகவும் இருக்கின்றது. ப்ராக்கோலி புற்றுநோய் பாதுகாப்பு காரணியாக உள்ளது, இதன் தன்மையானது புற்றுநோயினை வராமல் பாதுகாப்பதாகவும் உள்ளது.
தேவையான பொருட்கள் :
ப்ரக்கோலி 3 கப்,
இஞ்சி பூண்டு பேஸ்ட்,
மிளகாய் தூள்,
கரம் மசாலா,
அரிசிமாவு 1/2 கப்,
மைதா 1/4கப்,
சோளமாவு 2 ஸ்பூன்,
எலும்பிச்சை சாறு
உப்பு.
செய்முறை: வேகவைத்த ப்ரக்கோலியுடன் மேலே குறிப்பிட்ட பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்துக்கொள்ள வேண்டும். பின் சிறிது நீரை விட்டு நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும். வாணலியில் இட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்தால் சுவையான, மொறுமொறுப்பான ப்ரக்கோலி 65 ரெடி.
Next Story